இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1279ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ عَلْقَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ تُوُفِّيَ ابْنٌ لأُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ فَلَمَّا كَانَ الْيَوْمُ الثَّالِثُ دَعَتْ بِصُفْرَةٍ، فَتَمَسَّحَتْ بِهِ وَقَالَتْ نُهِينَا أَنْ نُحِدَّ أَكْثَرَ مِنْ ثَلاَثٍ إِلاَّ بِزَوْجٍ‏.‏
உம்மு அதிய்யா (ரழி) அவர்களின் மகன் ஒருவர் இறந்துவிட்டார். மூன்றாம் நாள் வந்தபோது அவர்கள் மஞ்சள் நிற நறுமணத்தைக் கேட்டு, அதைத் (தம் உடலில்) பூசிக்கொண்டு கூறினார்கள்: "கணவனைத் தவிர (வேறு யாருக்காகவும்) மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டுள்ளோம்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح