நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஃபரா'வும் 'அதீரா)வும் இல்லை.” அல்-ஃபரா' என்பது (அவர்கள் ஒட்டகங்கள் அல்லது ஆடுகளிலிருந்து பெற்ற) முதல் குட்டியாகும்; அதனை அவர்கள் (இணைவைப்பாளர்கள்) தமது சிலைகளுக்குப் பலியாக வழங்கி வந்தனர். 'அதீரா) என்பது ரஜப் மாதத்தில் (அறுக்கப்பட்டு வந்த ஓர் ஆடு) ஆகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஃபரா (என்பதோ) அதீரா (என்பதோ இஸ்லாத்தில்) இல்லை.”
ஃபரா என்பது அவர்களுக்குப் பிறக்கும் சந்ததிகளில் முதலாவது ஆகும். எனவே, அதை அவர்கள் அறுத்து வந்தார்கள்.
அதீரா என்பது, ரஜப் மாதத்தைக் கண்ணியப்படுத்துவதற்காக அவர்கள் ரஜப் மாதத்தில் அறுத்து வந்த ஒரு பிராணியாகும். ஏனெனில் அது புனித மாதங்களில் முதலாவதாக இருந்தது.