حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ النَّمَرِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي يَعْفُورٍ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى، وَسَأَلْتُهُ، عَنِ الْجَرَادِ، فَقَالَ غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سِتَّ أَوْ سَبْعَ غَزَوَاتٍ فَكُنَّا نَأْكُلُهُ مَعَهُ .
அபூ யஃபூர் கூறினார்கள்:
நான் இப்னு அபீ அவ்ஃபா (ரழி) அவர்களிடம் (உண்பதற்காக) வெட்டுக்கிளிகள் குறித்துக் கேட்டபோது அவர்கள் கூறக் கேட்டேன்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஆறு அல்லது ஏழு புனிதப் போர்களில் கலந்துகொண்டேன், நாங்கள் அவர்களுடன் சேர்ந்து அவற்றை (வெட்டுக்கிளிகளை) உண்டோம்.