حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مُحَاصِرِينَ قَصْرَ خَيْبَرَ، فَرَمَى إِنْسَانٌ بِجِرَابٍ فِيهِ شَحْمٌ، فَنَزَوْتُ لآخُذَهُ، فَالْتَفَتُّ فَإِذَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَاسْتَحْيَيْتُ مِنْهُ.
அப்துல்லாஹ் பின் முஃகப்பல் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் கைபர் கோட்டையை முற்றுகையிட்டிருந்தபோது, ஒருவர் கொழுப்பு அடங்கிய தோல் பாத்திரம் ஒன்றை எறிந்தார், அதை எடுப்பதற்காக நான் ஓடினேன், ஆனால் நான் திரும்பியபோது நபி (ஸல்) அவர்கள் (எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருப்பதை) கண்டேன், அதனால் அவர்கள் முன் நான் வெட்கப்பட்டேன்.