இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2221ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ بِشَاةٍ مَيِّتَةٍ فَقَالَ ‏"‏ هَلاَّ اسْتَمْتَعْتُمْ بِإِهَابِهَا ‏"‏‏.‏ قَالُوا إِنَّهَا مَيِّتَةٌ‏.‏ قَالَ ‏"‏ إِنَّمَا حَرُمَ أَكْلُهَا ‏"‏‏.‏
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செத்துப்போன ஓர் ஆட்டின் அருகே சென்று, மக்களிடம், "நீங்கள் அதன் தோலினால் பயனடைய மாட்டீர்களா?" என்று கூறினார்கள்.

அதற்கு மக்கள், அது செத்துப்போனது என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், "ஆனால், அதை உண்பது மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1936ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيِّ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، كِلاَهُمَا عَنْ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ،
بْنِ سَعْدٍ حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ أَبَا إِدْرِيسَ، أَخْبَرَهُ أَنَّ أَبَا ثَعْلَبَةَ قَالَ
حَرَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لُحُومَ الْحُمُرِ الأَهْلِيَّةِ ‏.‏
அபூ ஸஃலபா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக் கழுதைகளின் மாமிசத்தை (உண்பதை) தடுத்தார்கள் என்று அறிவித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح