இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1961 aஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَامِرٍ، عَنِ
الْبَرَاءِ، قَالَ ضَحَّى خَالِي أَبُو بُرْدَةَ قَبْلَ الصَّلاَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏
تِلْكَ شَاةُ لَحْمٍ ‏"‏ ‏.‏ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ عِنْدِي جَذَعَةً مِنَ الْمَعْزِ فَقَالَ ‏"‏ ضَحِّ بِهَا وَلاَ
تَصْلُحُ لِغَيْرِكَ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ مَنْ ضَحَّى قَبْلَ الصَّلاَةِ فَإِنَّمَا ذَبَحَ لِنَفْسِهِ وَمَنْ ذَبَحَ بَعْدَ الصَّلاَةِ
فَقَدْ تَمَّ نُسُكُهُ وَأَصَابَ سُنَّةَ الْمُسْلِمِينَ ‏"‏ ‏.‏
அல்-பரா (ரழி) அறிவித்தார்கள்:

என்னுடைய மாமா அபூ புர்தா (ரழி) ('ஈத்) தொழுகைக்கு முன்பு தமது பிராணியை அறுத்துப் பலியிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: அது (இறைச்சிக்காக அறுக்கப்பட்ட) ஓர் ஆடு (அழ்ஹா நாளில் கொடுக்கப்படும் பலியாகாது). அவர் (அபூ புர்தா (ரழி)) கூறினார்கள்: என்னிடம் ஆறு மாத ஆட்டுக்குட்டி ஒன்று உள்ளது. அப்போது அவர்கள் (நபிகள் நாயகம் (ஸல்)) கூறினார்கள்: அதை அறுத்துப் பலியிடுங்கள், ஆனால், அது உங்களைத் தவிர வேறு எவருக்கும் செல்லுபடியாகாது, பின்னர் கூறினார்கள்: யார் ('ஈத்) தொழுகைக்கு முன்பு (பிராணியை) அறுத்துப் பலியிட்டாரோ, அவர் உண்மையில் தமக்காகவே அதை அறுத்தவராவார், யார் தொழுகைக்குப் பின்னால் அறுத்துப் பலியிட்டாரோ, அவருடைய பலியிடும் கிரியை பூர்த்தியாகிவிட்டது மேலும், அவர் உண்மையில் முஸ்லிம்களின் மார்க்க நடைமுறையைப் பின்பற்றிவிட்டார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2801சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَامِرٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ ضَحَّى خَالٌ لِي يُقَالُ لَهُ أَبُو بُرْدَةَ قَبْلَ الصَّلاَةِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ شَاتُكَ شَاةُ لَحْمٍ ‏"‏ ‏.‏ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ عِنْدِي دَاجِنًا جَذَعَةً مِنَ الْمَعْزِ فَقَالَ ‏"‏ اذْبَحْهَا وَلاَ تَصْلُحُ لِغَيْرِكَ ‏"‏ ‏.‏
அல்-பரா இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

என் தாய்மாமன் அபூபுர்தா (ரழி) அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பாக குர்பானி கொடுத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுடைய ஆடு இறைச்சிக்கான ஆடுதான்" என்று கூறினார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் வீட்டில் வளர்ந்த ஓர் ஆட்டுக்குட்டி உள்ளது" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதையே அறுப்பீராக. ஆனால், அது உங்களைத் தவிர வேறு எவருக்கும் செல்லுபடியாகாது" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)