இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1961 iஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ، - يَعْنِي ابْنَ جَعْفَرٍ - حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ،
عَنْ أَبِي جُحَيْفَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ ذَبَحَ أَبُو بُرْدَةَ قَبْلَ الصَّلاَةِ فَقَالَ النَّبِيُّ صلى
الله عليه وسلم ‏"‏ أَبْدِلْهَا ‏"‏ ‏.‏ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَيْسَ عِنْدِي إِلاَّ جَذَعَةٌ - قَالَ شُعْبَةُ
وَأَظُنُّهُ قَالَ - وَهِيَ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ اجْعَلْهَا مَكَانَهَا
وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ ‏"‏ ‏.‏
அல்-பராஉ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் கூறியதாவது:

அபூபுர்தா (ரழி) அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே அறுத்துவிட்டார். நபி (ஸல்) அவர்கள், "(அதற்குப்) பதிலாக வேறொன்றை அறுப்பீராக!" என்று கூறினார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஓர் இளம் ஆட்டைத் (ஜதஆ) தவிர வேறில்லை" என்று கூறினார். -(அறிவிப்பாளர்) ஷுஅபா கூறுகிறார்: "அது பருவமடைந்த ஆட்டை (முசின்னா) விடச் சிறந்தது" (என்றும் அவர் கூறினார்) என நான் கருதுகிறேன்.-

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதையே (முந்தியதற்குப்) பதிலாக ஆக்குவீராக! ஆனால், உமக்குப் பிறகு வேறு எவருக்கும் அது (குர்பானியாக) போதுமானதாக இருக்காது" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح