இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5622ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ قَائِمًا عَلَى الْحَىِّ أَسْقِيهِمْ ـ عُمُومَتِي وَأَنَا أَصْغَرُهُمُ ـ الْفَضِيخَ، فَقِيلَ حُرِّمَتِ الْخَمْرُ‏.‏ فَقَالَ أَكْفِئْهَا‏.‏ فَكَفَأْنَا‏.‏ قُلْتُ لأَنَسٍ مَا شَرَابُهُمْ قَالَ رُطَبٌ وَبُسْرٌ‏.‏ فَقَالَ أَبُو بَكْرِ بْنُ أَنَسٍ وَكَانَتْ خَمْرَهُمْ‏.‏ فَلَمْ يُنْكِرْ أَنَسٌ‏.‏ وَحَدَّثَنِي بَعْضُ أَصْحَابِي أَنَّهُ سَمِعَ أَنَسًا يَقُولُ كَانَتْ خَمْرَهُمْ يَوْمَئِذٍ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் என் சிறிய தந்தைமார்களுக்கு ‘ஃபளீக்’ (எனும் பேரீச்சம்பழ மதுபானத்தைப்) புகட்டிக் கொண்டிருந்தேன். அவர்களில் நானே வயதில் மிகச் சிறியவனாக இருந்தேன். அப்போது, "மது தடை செய்யப்பட்டுவிட்டது" என்று கூறப்பட்டது. உடனே (அவர்கள்), "அதைக் கீழே கொட்டிவிடு" என்றார்கள். நாங்களும் அதைக் கீழே கொட்டிவிட்டோம்.

(பிறகு) நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "அவர்களின் பானம் எதாக இருந்தது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "முற்றிய பேரீச்சம்பழமும் (ருதப்), ஈச்சம் பிஞ்சும் (புஸ்ர்) தான்" என்று கூறினார்கள்.

அப்போது அபூபக்ர் பின் அனஸ், "அதுதான் அவர்களின் மதுவாக இருந்தது" என்று கூறினார். அனஸ் (ரலி) அவர்கள் அதை மறுக்கவில்லை. மேலும் என் தோழர்களில் சிலர், "அந்நாளில் அதுதான் அவர்களின் மதுவாக இருந்தது" என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாகச் செவியுற்றதாக என்னிடம் அறிவித்தனர்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح