இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1993 aஸஹீஹ் முஸ்லிம்
قَالَ وَأَخْبَرَهُ أَبُو سَلَمَةَ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم ‏ ‏ لاَ تَنْتَبِذُوا فِي الدُّبَّاءِ وَلاَ فِي الْمُزَفَّتِ ‏ ‏ ‏.‏ ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاجْتَنِبُوا الْحَنَاتِمَ
‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சுரைக்குடுக்கையிலும் கீல் பூசப்பட்ட குடத்திலும் நபீத் தயாரிக்காதீர்கள்" என்று கூறினார்கள். பிறகு அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், "(ஹன்தம் எனும்) மண் ஜாடிகளையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறுவார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح