அனஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
நான் என் குலத்தாருக்கு ‘ஃபளீக்’ (எனும் பேரீச்சம்பழ மதுவை) ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் என் தந்தையின் சகோதரர்களாக இருந்தனர். அவர்களில் நானே மிக இளையவனாக இருந்தேன். அப்போது "மது தடை செய்யப்பட்டுவிட்டது" என்று கூறப்பட்டது. உடனே அவர்கள், "இதை(க் கீழே) கொட்டிவிடு" என்றனர். நானும் அதைக் கொட்டிவிட்டேன்.
(அறிவிப்பாளர் கூறுகிறார்:) நான் அனஸ் (ரழி) அவர்களிடம், "அவர்களின் பானம் எதாக இருந்தது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "செங்காயும், முற்றிய பேரீச்சம்பழமும் (கலந்த கலவை)" என்றார்கள். அப்போது அபூபக்ர் பின் அனஸ், "அதுவே (அவர்களின்) மதுவாக இருந்தது" என்றார். இதை அனஸ் (ரழி) அவர்கள் மறுக்கவில்லை. மேலும் என் தோழர்களில் ஒருவர், "அதுவே அந்நாளில் அவர்களின் மதுவாக இருந்தது" என்று அனஸ் (ரழி) அவர்கள் கூறுவதை தான் கேட்டதாக எனக்கு அறிவித்தார்.