அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் எவரையும் அவரின் செயல் சொர்க்கத்தில் நுழைவிக்காது."
அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் கூறினார்கள்: "என்னையும் கூடத்தான்; (என் அமல்கள் சொர்க்கத்தில் நுழைவிக்காது.) அல்லாஹ் தன் அருளாலும் கருணையாலும் என்னை முழுமையாக அரவணைத்துக் கொண்டாலன்றி."