حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا كَانَتْ إِذَا مَاتَ الْمَيِّتُ مِنْ أَهْلِهَا فَاجْتَمَعَ لِذَلِكَ النِّسَاءُ، ثُمَّ تَفَرَّقْنَ، إِلاَّ أَهْلَهَا وَخَاصَّتَهَا، أَمَرَتْ بِبُرْمَةٍ مِنْ تَلْبِينَةٍ فَطُبِخَتْ، ثُمَّ صُنِعَ ثَرِيدٌ فَصُبَّتِ التَّلْبِينَةُ عَلَيْهَا ثُمَّ قَالَتْ كُلْنَ مِنْهَا فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ التَّلْبِينَةُ مَجَمَّةٌ لِفُؤَادِ الْمَرِيضِ، تَذْهَبُ بِبَعْضِ الْحُزْنِ .
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தமது குடும்பத்தாரில் ஒருவர் இறந்துவிட்டால், அதற்காகப் பெண்கள் ஒன்று கூடுவார்கள்; பின்னர் (அவரது) குடும்பத்தார் மற்றும் நெருங்கிய தோழிகளைத் தவிர மற்றவர்கள் கலைந்து சென்று விடுவார்கள். (அச்சமயத்தில்) ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு பானை ‘தல்பீனா’ சமைக்கப் பணிப்பார்கள். பிறகு தரீத் (ரொட்டித் துண்டுகள் கலந்த ஒரு வகை உணவு) தயாரிக்கப்பட்டு, தல்பீனா அதன் மீது ஊற்றப்படும். பிறகு ஆயிஷா (ரலி) அவர்கள் (அங்கிருந்த பெண்களிடம்), "இதிலிருந்து உண்ணுங்கள்! ஏனெனில், ‘தல்பீனா நோயாளியின் இதயத்திற்கு ஆறுதல் அளிக்கும்; துக்கத்தை ஓரளவு போக்கும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்று சொல்வார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரழி) கூறினார்கள்:
தம் குடும்பத்தாரில் யாரேனும் இறந்துவிட்டால், அதற்காகப் பெண்கள் கூடுவார்கள். பிறகு அவளுடைய குடும்பத்தாரையும் அவளுடைய நெருங்கியவர்களையும் தவிர மற்றவர்கள் கலைந்து சென்றுவிடுவார்கள். (அப்போது) ஆயிஷா (ரழி) ஒரு பாத்திரத்தில் 'தல்பீனா' தயாரிக்கச் சொல்வார்கள்; அது சமைக்கப்படும். பிறகு 'தரீத்' தயாரிக்கப்பட்டு தல்பீனாவின் மீது ஊற்றப்படும். பிறகு அவர்கள், "இதை உண்ணுங்கள்; ஏனெனில், 'தல்பீனா நோயாளியின் உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்கிறது; மேலும் அது கவலையில் ஒரு பகுதியைப் போக்குகிறது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்று சொல்வார்கள்.