காய்ச்சல் கண்ட ஒரு பெண், அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரழி) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போதெல்லாம், அவர்கள் அப்பெண்ணுக்காக துஆ செய்து, தண்ணீரை எடுத்து அவளுக்கும் அவளது ஆடைக்கும் இடையில் (கழுத்து மற்றும் மார்புப் பகுதிக்கு அருகில்) ஊற்றுவார்கள். மேலும் அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அதை (காய்ச்சலை) தண்ணீரால் குளிர்விக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்" என்று கூறுவார்கள்.