இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5751ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَنْفِثُ عَلَى نَفْسِهِ فِي مَرَضِهِ الَّذِي قُبِضَ فِيهِ بِالْمُعَوِّذَاتِ، فَلَمَّا ثَقُلَ كُنْتُ أَنَا أَنْفِثُ عَلَيْهِ بِهِنَّ، فَأَمْسَحُ بِيَدِ نَفْسِهِ لِبَرَكَتِهَا‏.‏ فَسَأَلْتُ ابْنَ شِهَابٍ كَيْفَ كَانَ يَنْفِثُ قَالَ يَنْفِثُ عَلَى يَدَيْهِ، ثُمَّ يَمْسَحُ بِهِمَا وَجْهَهُ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்த அந்த நோயின்போது, ‘அல்முஅவ்விதாத்’ (பாதுகாப்பு அத்தியாயங்களான ஸூரத்துல் இக்லாஸ், ஸூரத்துல் ஃபலக், ஸூரத்துன் நாஸ் ஆகியவற்றை) ஓதித் தம் மீது (தாமே) ஊதிக் கொள்வார்கள். அவர்களின் நோய் (மிகவும்) தீவிரமடைந்தபோது, நான் அவற்றை ஓதி அவர்கள் மீது ஊதி வருவேன் (அவர்களுக்கு ஓதிப் பார்ப்பேன்); நபியவர்களின் கையில் உள்ள பரக்கத்திற்காக (அவர்களின் கையைக்கொண்டு) அவர்களின் உடலைத் தடவி விடுவேன்.

(அறிவிப்பாளர் மஅமர் அவர்கள் இப்னு ஷிஹாப் அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு ஊதுவார்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஷிஹாப் அவர்கள், ‘அவர்கள் தங்கள் கைகளில் ஊதி, பின்னர் தங்கள் முகத்தின் மீது தடவிக் கொள்வார்கள்’ என்று கூறினார்கள்.)
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح