இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மேல் வரிசையின்) இரு முன் பற்களுக்கிடையே சற்று இடைவெளி உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் பேசும்போது அவர்களது முன் பற்களுக்கிடையிலிருந்து ஒளி போன்ற (ஒன்று) வெளிப்படுவதைப் போலத் தோன்றும்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன் பற்களுக்கு இடையில் ஒரு இடைவெளி இருந்தது. அவர்கள் பேசியபோது, அவர்களின் பற்களுக்கு இடையிலிருந்து ஒளி வெளிப்படுவதைப் போன்று தோன்றும்.
ஹதீஸ் தரம் : ஸனத் மிகவும் பலவீனமானது (ஸுபைர் அலீ ஸயீ)