கஅப் (ரஹ்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களிடம் சென்றார்கள். (அங்கு) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நினைவு கூர்ந்தனர். அப்போது கஅப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "எந்த ஒரு நாள் விடிந்தாலும், எழுபதாயிரம் வானவர்கள் இறங்கி வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்தைச் (கப்ரைச்) சூழ்ந்து கொள்ளாமல் இருப்பதில்லை. அவர்கள் தங்களது இறக்கைகளை (அடக்கஸ்தலத்தின் மீது) அடித்துக் கொண்டும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லிக் கொண்டும் இருப்பார்கள். மாலை நேரம் வந்ததும் அவர்கள் (வானிற்கு) ஏறிச் சென்று விடுவார்கள். (பிறகு) அவர்களைப் போன்றே (இன்னொரு எழுபதாயிரம் வானவர்கள்) இறங்கி வந்து, அவர்களும் அது போன்றே செய்வார்கள். (மறுமை நாளில்) பூமி பிளந்து அவர் (நபியவர்கள்) வெளிப்படும் போது, எழுபதாயிரம் வானவர்கள் அவரைப் புடைசூழ (கண்ணியமாக) அழைத்துச் செல்வார்கள்."