இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு மனிதர் அவர்களிடம் ஒரு (மார்க்கப்) பிரச்சனை குறித்துக் கேட்டார். அதற்கு அவர்கள், "அதைப் பற்றி எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்றதும், இப்னு உமர் (ரழி) (தமக்குத் தாமே), "இப்னு உமர் எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார்! தமக்குத் தெரியாத ஒன்றைப் பற்றிக் கேட்கப்பட்டபோது, 'அதைப் பற்றி எனக்குத் தெரியாது' என்று அவர் கூறிவிட்டார்" என்று கூறினார்கள்.