இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

261மிஷ்காத் அல்-மஸாபீஹ்
عَن عَوْنٍ قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ: مَنْهُومَانِ لَا يَشْبَعَانِ صَاحِبُ الْعِلْمِ وَصَاحِبُ الدُّنْيَا وَلَا يَسْتَوِيَانِ أَمَّا صَاحِبُ الْعِلْمِ فَيَزْدَادُ رِضًى لِلرَّحْمَنِ وَأَمَّا صَاحِبُ الدُّنْيَا فَيَتَمَادَى فِي الطُّغْيَانِ. ثُمَّ قَرَأَ عَبْدُ اللَّهِ (كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَى أَنْ رَآهُ اسْتَغْنَى) قَالَ وَقَالَ الْآخَرُ (إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عباده الْعلمَاء. رَوَاهُ الدَّارمِيّ
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“இரண்டு வேட்கையாளர்கள் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை: அறிவைத் தேடுபவர் மற்றும் உலகத்தைத் தேடுபவர். இவர்கள் இருவரும் சமமானவர்கள் அல்லர். அறிவைத் தேடுபவரோ அளவற்ற அருளாளனின் (அல்லாஹ்வின்) திருப்பதியை அதிகப்படுத்திக் கொள்கிறார். ஆனால் உலகத்தைத் தேடுபவரோ வரம்புமீறுதலில் நீடிக்கிறார்.”

பிறகு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் (உலகத்தைத் தேடுபவர் குறித்து), “அவ்வாறில்லை! நிச்சயமாக மனிதன் தன்னைத் தன்னிறைவு பெற்றவனாகக் கருதுவதால் வரம்பு மீறுகிறான்” (அல்குர்ஆன் 96:6-7) என்று ஓதினார்கள்.

மேலும் மற்றவர் (அறிவைத் தேடுபவர்) குறித்து, “நிச்சயமாக, அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்கள் அறிஞர்களே” (அல்குர்ஆன் 35:28) என்று ஓதினார்கள்.

(நூல்: தாரிமீ)
ஹதீஸ் தரம் : பலவீனமானது (அல்பானி)
ضَعِيف (الألباني)