ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"நான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுடன் மக்கா செல்லும் பாதையில் இரவில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் எனக்கு ஹதீஸ்களை அறிவிப்பார்கள். நான் அதனை (எனது) ஒட்டகச் சேணத்தின் மரப்பகுதியில் எழுதி வைத்துக்கொள்வேன். பின்னர் காலை விடிந்ததும் அதனை (முறையாக ஏட்டில்) எழுதிக்கொள்வேன்."
ஹதீஸ் தரம் : இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹ் (அத்தாரானீ)