இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மறுமை நாளில் ஆதமுடைய மகனின் பாதங்கள், அவனிடம் ஐந்து விஷயங்களைப் பற்றி கேட்கப்படும் வரை அவனுடைய இறைவனுக்கு முன்னால் இருந்து நகரவே நகராது: அவனது ஆயுளைப் பற்றியும், அதை அவன் எவ்விதம் கழித்தான் என்பது பற்றியும், அவனது இளமையைப் பற்றியும், அதை அவன் எதில் ஈடுபடுத்தி கழித்தான் என்பது பற்றியும், அவனது செல்வத்தைப் பற்றியும், அதை அவன் எவ்வாறு சம்பாதித்தான், எதில் செலவழித்தான் என்பது பற்றியும், அவன் அறிந்திருந்த அறிவின் மூலம் என்ன செய்தான் என்பது பற்றியும் கேட்கப்படும்."
அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மறுமை நாளில் ஓர் அடியானின் இரு பாதங்களும் நகரவே நகராது, அவன் தனது வாழ்நாளை (ஆயுளை) எதில் கழித்தான்? தனது அறிவைக் கொண்டு என்ன செய்தான்? தனது செல்வத்தை எங்கிருந்து சம்பாதித்தான், மேலும் எதில் செலவழித்தான்? தனது உடலை எதில் (பயன்படுத்தி) தேய்த்தான்? என்று வினவப்படும் வரை."
அவர் (இமாம் திர்மிதி) கூறினார்: இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் ஆகும். ஸயீத் பின் அப்துல்லாஹ் பின் ஜுரைஜ் பஸ்ராவைச் சேர்ந்தவர்; இவர் அபூ பர்ஸாவின் (விடுதலை செய்யப்பட்ட) அடிமையாவார். அபூ பர்ஸாவின் பெயர் நள்லா பின் உபைத் ஆகும்.
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மறுமை நாளில், ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) இரு பாதங்களும் ஐந்து விஷயங்களைப் பற்றி அவனிடம் விசாரிக்கப்படும் வரை (அவ்விடத்தை விட்டு) நகராது: (1) அவனது ஆயுளை எதில் கழித்தான்; (2) அவனது இளமையை எதில் (ஈடுபடுத்தி) தேய்த்தான்; (3) அவனது செல்வத்தை எங்கிருந்து சம்பாதித்தான்; (4) அதனை எதில் செலவழித்தான்; (5) தான் கற்ற கல்வியின்படி என்ன அமல் (செயல்) செய்தான் (என்பவையே அந்த ஐந்து கேள்விகளாகும்)."
(நூல்: திர்மிதீ. இது 'கரீப்' தரத்திலமைந்த ஹதீஸ் என இமாம் திர்மிதீ குறிப்பிட்டுள்ளார்).
وعن أبي برزة -براء ثم زاى- نضلة بن عبيد الأسلمى، رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تزول قدما عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه ، وعن علمه فيما فعل فيه، وعن ماله من أين اكتسبه، وفيما أنفقه، وعن جسمه فيم أبلاه ((رواه الترمذي وقاال: حديث حسن صحيح)).
அபூ பர்ஸா நழ்லா பின் உபைத் அல்அஸ்லமீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் ஓர் அடியான், தனது வாழ்நாளை எதில் கழித்தான் என்றும், தனது அறிவைக் கொண்டு என்ன செய்தான் என்றும், தனது செல்வத்தை எங்கிருந்து சம்பாதித்தான் மற்றும் எதில் செலவழித்தான் என்றும், தனது உடலை எதில் ஈடுபடுத்தினான் என்றும் கேட்கப்படும் வரை, அவனது இரு பாதங்களும் நகரவே நகராது."
(இதை இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்கள் பதிவு செய்து, இது 'ஹஸன் ஸஹீஹ்' எனக் கூறியுள்ளார்கள்).
அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் ஓர் அடியானிடம் அவனது ஆயுளை எதில் கழித்தான் (முடித்தான்) என்றும், அவனது கல்வியைக் கொண்டு என்ன செய்தான் (செயல்பட்டான்) என்றும், அவனது செல்வத்தை எங்கிருந்து ஈட்டினான் (சம்பாதித்தான்) மற்றும் எதில் செலவழித்தான் என்றும், அவனது உடலை எதில் ஈடுபடுத்தித் தேய்த்தான் (முதுமையடையச் செய்தான்) என்றும் விசாரிக்கப்படாத வரை அவனது இரு பாதங்களும் (அவன் நிற்குமிடத்திலிருந்து) நகராது."