சஅத் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"உஹுத் தினத்தன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வலது பக்கத்திலும் அவர்களின் இடது பக்கத்திலும், வெள்ளை ஆடை அணிந்திருந்த இரண்டு மனிதர்களை நான் கண்டேன். அதற்கு முன்போ பின்னரோ அவர்களை நான் கண்டதில்லை." (அவர்கள்) ஜிப்ரீல் (அலை) அவர்களும் மீக்காயீல் (அலை) அவர்களுமாவர்.
ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வலது பக்கத்திலும் அவர்களின் இடது பக்கத்திலும் உஹுத் தினத்தன்று வெள்ளை ஆடைகள் அணிந்திருந்த இரண்டு நபர்கள் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்ததை கண்டேன்; நான் அவர்களை அதற்கு முன்போ பின்போ கண்டதில்லை.