அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்: "மாண்பு (மகாப்பெருமை) எனது மேலாடை, மகத்துவம் எனது கீழாடை. அவ்விரண்டில் ஏதேனும் ஒன்றில் என்னுடன் போட்டியிடுபவனை (அதாவது, இந்த இறைப்பண்புகளை தனக்குரியதாகக் கோருபவனை) நான் நரகில் எறிவேன்."