حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ دَخَلْتُ عَلَيْهِ فَنَاوَلَنِي طِيبًا، قَالَ كَانَ أَنَسٌ ـ رضى الله عنه ـ لاَ يَرُدُّ الطِّيبَ. قَالَ وَزَعَمَ أَنَسٌ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ.
துமாமா பின் அப்துல்லாஹ் அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அனஸ் (ரழி) அவர்களிடம் சென்றபோது, அவர்கள் எனக்கு வாசனைத் திரவியம் கொடுத்தார்கள். அனஸ் (ரழி) அவர்கள் வாசனைத் திரவியத்தை மறுக்கமாட்டார்கள் என்று (துமாமா) கூறினார்கள். (மேலும் துமாமா கூறினார்:) நபி (ஸல்) அவர்கள் வாசனைத் திரவியத்தை மறுப்பவர்களாக இருக்கவில்லை என்று அனஸ் (ரழி) அவர்கள் (உறுதியாக) அறிவித்தார்கள்.
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، وَأَبُو نُعَيْمٍ قَالاَ حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ، قَالَ أَخْبَرَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ أَنَسٌ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، وَزَعَمَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَنَفَّسُ ثَلاَثًا.
துமாமா பின் அப்துல்லாஹ் அறிவித்தார்கள்:
அனஸ் (ரழி) அவர்கள் (நீர் அருந்தும்போது) பாத்திரத்திலிருந்து (வாயை அகற்றி) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சு விடுவார்கள் என்றும், நபி (ஸல்) அவர்கள் (நீர் அருந்தும்போது) மூன்று முறை (பாத்திரத்திலிருந்து வாயை அகற்றி) மூச்சு விடுவார்கள் என்றும் (உறுதிபடக்) கூறுவார்கள்.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ الأَنْصَارِيُّ، عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ، أَنَّهُ كَانَ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ ثَلاَثًا وَزَعَمَ أَنَسٌ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ ثَلاَثًا .
அனஸ் (ரலி) அவர்கள் பாத்திரத்தில் (பருகும்போது, வாயை எடுத்து) மூன்று முறை மூச்சு விட்டுக்கொள்வார்கள். மேலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாத்திரத்தில் (பருகும்போது, வாயை எடுத்து) மூன்று முறை மூச்சு விட்டுக்கொள்வார்கள்" என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ، عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: كَانَ أَنَسُ بْنُ مَالِكٍ، لا يَرُدُّ الطِّيبَ، وَقَالَ أَنَسٌ: إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لا يَرُدُّ الطِّيبَ.
துமாமா இப்னு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் நறுமணத்தை (அவர்களுக்கு வழங்கப்பட்டால்) மறுக்க மாட்டார்கள். மேலும் அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் நறுமணத்தை (அவர்களுக்கு வழங்கப்பட்டால்) மறுக்க மாட்டார்கள்.