حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ سَيَّارٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ،
بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ عَلَى غِلْمَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ .
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது, அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள் (அவர்களுடன் அன்புடன் பழகி, ஸலாம் கூறுவது நபிவழியாகும்).
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَيَّارٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ مَرَّ عَلَى صِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ، وَقَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَفْعَلُهُ بِهِمْ.
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் சில சிறுவர்களைக் கடந்து சென்றபோது, அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள். மேலும், "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு (சிறுவர்களுக்கு ஸலாம்) செய்பவர்களாக இருந்தார்கள்" என்று கூறினார்கள்.