இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5812ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ قُلْتُ لَهُ أَىُّ الثِّيَابِ كَانَ أَحَبَّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْحِبَرَةُ‏.‏
கத்தாதா அவர்கள் அறிவித்தார்கள்: நான் அனஸ் (ரழி) அவர்களிடம் கேட்டேன், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான ஆடை வகை எது?" அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள், "ஹிப்ரா (யமன் நாட்டுப் பட்டைக் கோடுகளுடைய ஒருவகைத் துணி)."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح