அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் நிராகரிப்பாளர்களிடம், "பூமி நிரம்பத் தங்கம் உனக்குச் சொந்தமாக இருந்து, அதை (ஈடாகக்) கொடுத்து நீ விடுதலை பெற விரும்புவாயா?" என்று கூறப்படும். அதற்கு அவன், 'ஆம்' என்று கூறுவான். அப்போது அவனிடம், "இதைவிட மிகவும் இலகுவான ஒன்று உன்னிடம் கோரப்பட்டது (ஆனால் நீ அதைப் பொருட்படுத்தவில்லை)" என்று கூறப்படும்.