ஸயீத் பின் ஜுபைர் அவர்கள் கூறினார்கள்: இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அல்-கவ்ஸர் பற்றிக் கூறினார்கள்: "அது அல்லாஹ் அவனுடைய தூதருக்கு (ஸல்) வழங்கிய நன்மையாகும்." நான் ஸயீத் பின் ஜுபைர் அவர்களிடம் கூறினேன்: "ஆனால் மக்கள் அது சுவர்க்கத்தில் உள்ள ஒரு நதி என்று கூறுகின்றனர்." ஸயீத் அவர்கள் கூறினார்கள்: "சுவர்க்கத்தில் உள்ள அந்த நதி, அல்லாஹ் அவனுடைய தூதருக்கு (ஸல்) வழங்கிய நன்மையின் ஒரு பகுதியாகும்."