இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2298 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ مَعْبَدِ،
بْنِ خَالِدٍ عَنْ حَارِثَةَ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ حَوْضُهُ مَا بَيْنَ صَنْعَاءَ
وَالْمَدِينَةِ ‏"‏ ‏.‏ فَقَالَ لَهُ الْمُسْتَوْرِدُ أَلَمْ تَسْمَعْهُ قَالَ ‏"‏ الأَوَانِي ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ فَقَالَ الْمُسْتَوْرِدُ
‏"‏ تُرَى فِيهِ الآنِيَةُ مِثْلَ الْكَوَاكِبِ ‏"‏ ‏.‏
ஹாரிதா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டதாக அறிவித்தார்கள்:

அவர்களுடைய தடாகம் ஸன்ஆவிற்கும் மதீனாவிற்கும் இடையிலுள்ள தூரத்தைப் போன்று பரந்து விரிந்திருக்கும்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஸ்தவ்ரித் (ரழி) அவர்கள் கேட்டார்கள்: பாத்திரங்கள் குறித்து நீங்கள் எதையும் கேட்கவில்லையா?

அதற்கு அவர் (ஹாரிதா (ரழி) அவர்கள்) கூறினார்கள். இல்லை.

முஸ்தவ்ரித் (ரழி) அவர்கள் கூறினார்கள்: பாத்திரங்கள் நட்சத்திரங்களைப் போன்று இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح