இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நரகவாசிகளிலிருந்து சொர்க்கவாசிகள் (யாரென்று) அறியப்பட்டுவிட்டதா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "ஆம்" என்று கூறினார்கள். (அதற்கு) அவர், "அப்படியானால், செயல்படுபவர்கள் எதற்காகச் செயல்பட வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஒவ்வொருவருக்கும் அவர் எதற்காகப் படைக்கப்பட்டாரோ, அது எளிதாக்கப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார்கள்.