அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மாஇஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்: ஒருவேளை நீங்கள் முத்தமிட்டிருக்கலாம், அல்லது அணைத்திருக்கலாம், அல்லது பார்த்திருக்கலாம். அதற்கு அவர், “இல்லை” என்றார். பின்னர் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் அவளுடன் தாம்பத்திய உறவு கொண்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “ஆம்” என்றார். (இந்த பதிலுக்குப் பிறகு) அவருக்கு கல்லெறிந்து மரண தண்டனை நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர், ”இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் வாயிலாக” என்று குறிப்பிடவில்லை. இது வஹ்ப் அவர்களின் அறிவிப்பாகும்.
وَعَنْ اِبْنِ عَبَّاسٍ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا قَالَ: { لَمَّا أَتَى مَاعِزُ بْنُ مَالِكٍ إِلَى اَلنَّبِيِّ - صلى الله عليه وسلم -قَالَ لَهُ: لَعَلَّكَ قَبَّلْتَ, أَوْ غَمَزْتَ, أَوْ نَظَرْتَ? قَالَ: لَا يَا رَسُولَ اَللَّهِ. } رَوَاهُ اَلْبُخَارِيُّ [1]
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், 'மாஇஸ் (தாம் விபச்சாரம் செய்ததாக ஒப்புக்கொண்டு) நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் அவரிடம், "ஒருவேளை நீர் (அப்பெண்ணை) முத்தமிட்டிருக்கலாம், அல்லது தீண்டியிருக்கலாம், அல்லது பார்த்திருக்கலாம்" எனக் கூறினார்கள். மாஇஸ், 'இல்லை, அல்லாஹ்வின் தூதரே' என்றார்.' இதை அல்-புகாரி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.