அல்-காஸிம் பின் முஹம்மது அவர்கள் அறிவித்தார்கள்:
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், 'லிஆன்' செய்த தம்பதியினரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரழி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள், 'ஆதாரம் இல்லாமல் ஒரு பெண்ணை நான் கல்லெறிந்து (கொல்ல) நேர்ந்தால் (இப்பெண்ணையே தண்டித்திருப்பேன்)' என்று எவளைப் பற்றிக் கூறினார்களோ, அந்தப் பெண் இவள்தானா?" என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், "இல்லை! அந்தப் பெண் (தன் தீய நடத்தையை) வெளிப்படுத்திக் கொண்டவள்" என்று கூறினார்கள்.