حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، اطَّلَعَ مِنْ بَعْضِ حُجَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَامَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِشْقَصٍ ـ أَوْ بِمَشَاقِصَ ـ فَكَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَخْتِلُ الرَّجُلَ لِيَطْعُنَهُ.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றினுள் எட்டிப் பார்த்தார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் அகன்ற அம்பு முனையைக் (அல்லது பல அகன்ற அம்பு முனைகளைக்) கையில் பிடித்தவாறு அவரை நோக்கி எழுந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மனிதரைக் குத்துவதற்காகப் பதுங்கிச் சென்றதை நான் இப்போதும் காண்பது போன்றுள்ளது.
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ - وَاللَّفْظُ
لِيَحْيَى وَأَبِي كَامِلٍ - قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ،
اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، اطَّلَعَ مِنْ بَعْضِ حُجَرِ النَّبِيِّ صلى الله عليه
وسلم فَقَامَ إِلَيْهِ بِمِشْقَصٍ أَوْ مَشَاقِصَ فَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
يَخْتِلُهُ لِيَطْعُنَهُ .
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு நபர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றினுள் (ஒரு துவாரத்தின் வழியாக) எட்டிப் பார்த்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் ஓர் அகலமான அம்பு முனையையோ அல்லது பல அம்பு முனைகளையோ எடுத்துக்கொண்டு அவரை நோக்கிச் சென்றார்கள். (அம்மனிதரைக்) குத்துவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவன் அறியாத விதத்தில்) பதுங்கிச் செயல்படுவதை நான் பார்ப்பதைப் போன்று இருக்கிறது.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، اطَّلَعَ مِنْ بَعْضِ حُجَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَامَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِشْقَصٍ أَوْ مَشَاقِصَ - قَالَ - فَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَخْتِلُهُ لِيَطْعُنَهُ .
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் நபிகளார் (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றினுள் எட்டிப் பார்த்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு அம்பின் முனையையோ அல்லது அம்பின் முனைகளையோ எடுத்துக்கொண்டு அவரை நோக்கி எழுந்தார்கள். (அனஸ்) கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மனிதரை மறைந்திருந்து (தாக்குவதற்காக) பின்தொடர்வதை, இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது."