இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1891ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِي سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، أَنَّ أَعْرَابِيًّا، جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثَائِرَ الرَّأْسِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي مَاذَا فَرَضَ اللَّهُ عَلَىَّ مِنَ الصَّلاَةِ فَقَالَ ‏"‏ الصَّلَوَاتِ الْخَمْسَ، إِلاَّ أَنْ تَطَّوَّعَ شَيْئًا ‏"‏‏.‏ فَقَالَ أَخْبِرْنِي مَا فَرَضَ اللَّهُ عَلَىَّ مِنَ الصِّيَامِ فَقَالَ ‏"‏ شَهْرَ رَمَضَانَ، إِلاَّ أَنْ تَطَّوَّعَ شَيْئًا ‏"‏‏.‏ فَقَالَ أَخْبِرْنِي بِمَا فَرَضَ اللَّهُ عَلَىَّ مِنَ الزَّكَاةِ فَقَالَ فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَرَائِعَ الإِسْلاَمِ‏.‏ قَالَ وَالَّذِي أَكْرَمَكَ لاَ أَتَطَوَّعُ شَيْئًا، وَلاَ أَنْقُصُ مِمَّا فَرَضَ اللَّهُ عَلَىَّ شَيْئًا‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَفْلَحَ إِنْ صَدَقَ، أَوْ دَخَلَ الْجَنَّةَ إِنْ صَدَقَ ‏"‏‏.‏
தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

தலைமுடி கலைந்த நிலையில் கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் அல்லாஹ் என் மீது எதைக் கடமையாக்கியுள்ளான் என்பதை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், “ஐவேளைத் தொழுகைகள்; நீர் சுயமாக விரும்பி (நஃபில்) ஏதேனும் தொழுதாலே தவிர” என்று கூறினார்கள்.

அவர், “நோன்பில் அல்லாஹ் என் மீது எதைக் கடமையாக்கியுள்ளான் என்பதை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், “ரமளான் மாதம்; நீர் சுயமாக விரும்பி (நஃபில்) ஏதேனும் நோற்றாலே தவிர” என்று கூறினார்கள்.

அவர், “ஜகாத்தில் அல்லாஹ் என் மீது எதைக் கடமையாக்கியுள்ளான் என்பதை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை அவருக்குத் தெரிவித்தார்கள்.

அப்பொழுது அவர், “உங்களைக் கண்ணியப்படுத்தியவன் மீது சத்தியமாக! நான் சுயமாக விரும்பி (நஃபில்) எதையும் செய்யமாட்டேன்; அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ள எதையும் குறைக்கவுமாட்டேன்” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் உண்மை உரைத்திருப்பாரானால் வெற்றி பெற்றுவிட்டார்; அல்லது இவர் உண்மை உரைத்திருப்பாரானால் சொர்க்கம் செல்வார்” என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2090சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - قَالَ حَدَّثَنَا أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، أَنَّ أَعْرَابِيًّا، جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثَائِرَ الرَّأْسِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي مَاذَا فَرَضَ اللَّهُ عَلَىَّ مِنَ الصَّلاَةِ قَالَ ‏"‏ الصَّلَوَاتُ الْخَمْسُ إِلاَّ أَنْ تَطَوَّعَ شَيْئًا ‏"‏ ‏.‏ قَالَ أَخْبِرْنِي بِمَا افْتَرَضَ اللَّهُ عَلَىَّ مِنَ الصِّيَامِ قَالَ ‏"‏ صِيَامُ شَهْرِ رَمَضَانَ إِلاَّ أَنْ تَطَوَّعَ شَيْئًا ‏"‏ ‏.‏ قَالَ أَخْبِرْنِي بِمَا افْتَرَضَ اللَّهُ عَلَىَّ مِنَ الزَّكَاةِ فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِشَرَائِعِ الإِسْلاَمِ ‏.‏ فَقَالَ وَالَّذِي أَكْرَمَكَ لاَ أَتَطَوَّعُ شَيْئًا وَلاَ أَنْقُصُ مِمَّا فَرَضَ اللَّهُ عَلَىَّ شَيْئًا ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَفْلَحَ إِنْ صَدَقَ ‏"‏ ‏.‏ أَوْ ‏"‏ دَخَلَ الْجَنَّةَ إِنْ صَدَقَ ‏"‏ ‏.‏
தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

தலைவிரி கோலத்துடன் ஒரு கிராமவாசி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ள தொழுகை பற்றி எனக்குக் கூறுங்கள்" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஐந்து வேளைத் தொழுகைகள்; நீராக உபரியாகச் செய்தால் தவிர" என்று கூறினார்கள்.

பிறகு அவர், "அல்லாஹ் என் மீது நோன்பில் கடமையாக்கியது என்னவென்று எனக்குக் கூறுங்கள்" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ரமலான் மாதத்தின் நோன்பு; நீராக உபரியாக நோற்றால் தவிர" என்று கூறினார்கள்.

பிறகு அவர், "அல்லாஹ் என் மீது ஸகாத்தில் கடமையாக்கியது என்னவென்று எனக்குக் கூறுங்கள்" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் சட்டங்களை அவருக்குத் தெரிவித்தார்கள்.

பிறகு அவர், "உங்களைக் கண்ணியப்படுத்தியவன் மீது சத்தியமாக! நான் உபரியாக எதையும் செய்ய மாட்டேன்; அல்லாஹ் என் மீது கடமையாக்கியதிலிருந்து எதையும் குறைக்கவும் மாட்டேன்" என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் உண்மையாக இருந்தால் வெற்றி பெறுவார்," அல்லது "அவர் உண்மையாக இருந்தால் சொர்க்கத்தில் நுழைவார்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)