உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்று அறிவித்தார்கள்:
இந்த ஆபத்து அல்லது நோய் ஒரு தண்டனையாக இருந்தது. அதனால் உங்களுக்கு முன்னிருந்த சில சமூகங்கள் தண்டிக்கப்பட்டன. பிறகு அது பூமியில் விடப்பட்டது. அது ஒருமுறை சென்றுவிடுகிறது, மீண்டும் திரும்பி வருகிறது. ஒரு நிலத்தில் அது இருப்பதாகக் கேள்விப்பட்டவர் அதன் பக்கம் செல்லக்கூடாது, மேலும் அது பரவியுள்ள ஒரு நிலத்தில் இருப்பவர் அதிலிருந்து தப்பி ஓடக்கூடாது.