"நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களிடம் சென்றோம். அல்-ஹஜ்ஜாஜிடம் இருந்து நாங்கள் அனுபவித்து வந்ததைப் பற்றி அவர்களிடம் நாங்கள் முறையிட்டோம். எனவே அவர்கள் கூறினார்கள்: 'ஓர் ஆண்டைக் காட்டிலும் அதற்குப் பின்னால் வரும் ஆண்டு மிகவும் மோசமானதாகவே இருக்கும், உங்கள் இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை. இதை நான் உங்கள் நபியிடமிருந்து (ஸல்) செவியுற்றேன்.'"
السادس: عن الزبير بن عدي قال: أتينا أنس بن مالك رضي الله عنه فشكونا إليه ما نلقى من الحجاج. فقال: اصبروا فإنه لا يأتي زمان إلا والذي بعده شر منه حتى تلقوا ربكم سمعته من نبيكم صلى الله عليه وسلم.((رواه البخاري)).
அஸ்-ஸுபைர் பின் அதீ அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களிடம் சென்று, அல்-ஹஜ்ஜாஜிடம் நாங்கள் படும் துன்பங்கள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: “பொறுமையாக இருங்கள். ஏனெனில், உங்கள் ரப்பை நீங்கள் சந்திக்கும் வரை, இனி வரும் ஒவ்வொரு காலமும் அதற்கு முந்தைய காலத்தை விட மோசமானதாகவே இருக்கும். இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்.”