நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "யா அல்லாஹ்! எங்களுடைய ஷாமுக்கும் எங்களுடைய யமனுக்கும் நீ அருள் புரிவாயாக" என்று கூறினார்கள். மக்கள், "எங்களுடைய நஜ்துக்கும் கூட (அருள் புரிவாயாக)" என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீண்டும், "யா அல்லாஹ்! எங்களுடைய ஷாமுக்கும் யமனுக்கும் நீ அருள் புரிவாயாக" என்று கூறினார்கள். அவர்கள் மீண்டும், "எங்களுடைய நஜ்துக்கும் கூட (அருள் புரிவாயாக)" என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அங்கே (நஜ்தில்) நிலநடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும்; அங்கிருந்துதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்" என்று கூறினார்கள்.