இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: தஜ்ஜால் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர்கள் கூறினார்கள்:
"கவனியுங்கள்! நிச்சயமாக உங்கள் இறைவன் (அல்லாஹ்) ஒற்றைக் கண்ணன் அல்லன். நிச்சயமாக அவன் (தஜ்ஜால்) ஒற்றைக் கண்ணன் ஆவான்; அவனது வலது கண் மிதக்கும் திராட்சையைப் போன்று இருக்கும்."