அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நானும் என் இரண்டு உறவினர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இல்லத்திற்குச் சென்றோம். அவர்களில் ஒருவர் கூறினார்: அல்லாஹ்வின் தூதரே, சர்வவல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உங்கள் பொறுப்பில் ஒப்படைத்துள்ள சில நிலங்களுக்கு எங்களை ஆளுநர்களாக நியமியுங்கள். மற்றவரும் இதேப் போன்றே கூறினார். அவர்கள் (ஸல்) கூறினார்கள்: நாங்கள் இந்தப் பதவிக்கு அதைக் கேட்பவரையும், அதற்காகப் பேராசைப்படுபவரையும் நியமிப்பதில்லை.