அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட வேண்டும், பின்னர் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு நான் கொல்லப்பட வேண்டும், பின்னர் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு நான் கொல்லப்பட வேண்டும் என விரும்புகிறேன்." அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் மூன்று முறை, "அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதற்கு நான் சாட்சி கூறுகிறேன்!" என்று கூறினார்கள்.