இப்னு `அப்பாஸ் (ரழி) அவர்கள் லிஆன் சத்தியம் செய்த தம்பதியினரைக் குறிப்பிட்டார்கள். `அப்துல்லாஹ் பின் ஷத்தாத் அவர்கள் (அவரிடம்), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'நான் எப்போதாவது எந்தப் பெண்ணையாவது சாட்சிகள் இல்லாமல் கல்லெறிந்து கொல்ல நேரிட்டால் (அந்தப் பெண்ணைக் கல்லெறிந்து கொன்றிருப்பேன்)' என்று எந்தப் பெண்ணைக் குறித்துக் கூறினார்களோ அந்தப் பெண்தானா இவள்?" என்று கேட்டார்கள். இப்னு `அப்பாஸ் (ரழி) அவர்கள், "இல்லை, அந்தப் பெண்மணி (தனது சந்தேகத்திற்கிடமான நடத்தையால்) தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்" என்று பதிலளித்தார்கள்.