அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள், அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப் (ரழி) அவர்கள் (பின்வருமாறு) தெரிவித்தார்கள்:
ரோமப் பேரரசர் ஹெராக்ளியஸ் தம்மை அழைத்து ஆளனுப்பினார். பிறகு (ஹெராக்ளியஸ்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டு வருமாறு கோரினார். அக்கடிதத்தை திஹ்யா அல்கல்பீ (ரழி) அவர்கள் பூஸ்ராவின் ஆளுநரிடம் கொடுத்திருந்தார்கள்; அவர் அதை (பூஸ்ராவின் ஆளுநர்) ஹெராக்ளியஸிடம் கொடுத்தார். (பிறகு) ஹெராக்ளியஸ் அதை எனக்குக் கொடுத்தார், நான் அதை வாசித்தேன். அதில் (பின்வருமாறு) இருந்தது:
அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மதிடமிருந்து ரோமர்களின் தலைவர் ஹெராக்ளியஸுக்கு.
நேர்வழியைப் பின்பற்றுபவர் மீது சாந்தி உண்டாவதாக.
இதற்குப் பின் (அம்மா பஅது), நான் உங்களை இஸ்லாத்தின் பால் அழைக்கிறேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; ஈடேற்றம் பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுக்குரிய நற்கூலியை இரு முறை வழங்குவான். நீங்கள் புறக்கணித்தால், (உங்கள்) குடிமக்களின் (அதாவது, விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களின்) பாவமும் உங்கள் மீதே சாரும்.
மேலும், '{யா அஹ்லல் கிதாபி தஆலவ் இலா கலிமதின் ஸவாயின் பைனனா வபைனகும்...}'
'வேதமுடையோரே! எங்களுக்கும் உங்களுக்கும் பொதுவான ஒரு வார்த்தையின் பக்கம் வாருங்கள்...' (என்று தொடங்கி),
'{...இஷ்ஹதூ பிஅன்னா முஸ்லிமூன்}'
'நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்' (என்பது வரை அதில் எழுதப்பட்டிருந்தது)."