இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2215ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ خَرَجَ ثَلاَثَةٌ يَمْشُونَ فَأَصَابَهُمُ الْمَطَرُ، فَدَخَلُوا فِي غَارٍ فِي جَبَلٍ، فَانْحَطَّتْ عَلَيْهِمْ صَخْرَةٌ‏.‏ قَالَ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ ادْعُوا اللَّهَ بِأَفْضَلِ عَمَلٍ عَمِلْتُمُوهُ‏.‏ فَقَالَ أَحَدُهُمُ اللَّهُمَّ، إِنِّي كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ، فَكُنْتُ أَخْرُجُ فَأَرْعَى، ثُمَّ أَجِيءُ فَأَحْلُبُ، فَأَجِيءُ بِالْحِلاَبِ فَآتِي بِهِ أَبَوَىَّ فَيَشْرَبَانِ، ثُمَّ أَسْقِي الصِّبْيَةَ وَأَهْلِي وَامْرَأَتِي، فَاحْتَبَسْتُ لَيْلَةً‏.‏ فَجِئْتُ فَإِذَا هُمَا نَائِمَانِ ـ قَالَ ـ فَكَرِهْتُ أَنْ أُوقِظَهُمَا، وَالصِّبِيْةُ يَتَضَاغَوْنَ عِنْدَ رِجْلَىَّ، فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمَا، حَتَّى طَلَعَ الْفَجْرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ‏.‏ قَالَ فَفُرِجَ عَنْهُمْ‏.‏ وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي كُنْتُ أُحِبُّ امْرَأَةً مِنْ بَنَاتِ عَمِّي كَأَشَدِّ مَا يُحِبُّ الرَّجُلُ النِّسَاءَ، فَقَالَتْ لاَ تَنَالُ ذَلِكَ مِنْهَا حَتَّى تُعْطِيَهَا مِائَةَ دِينَارٍ‏.‏ فَسَعَيْتُ فِيهَا حَتَّى جَمَعْتُهَا، فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتِ اتَّقِ اللَّهَ، وَلاَ تَفُضَّ الْخَاتَمَ إِلاَّ بِحَقِّهِ‏.‏ فَقُمْتُ وَتَرَكْتُهَا، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً، قَالَ فَفَرَجَ عَنْهُمُ الثُّلُثَيْنِ‏.‏ وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقٍ مِنْ ذُرَةٍ فَأَعْطَيْتُهُ، وَأَبَى ذَاكَ أَنْ يَأْخُذَ، فَعَمَدْتُ إِلَى ذَلِكَ الْفَرَقِ، فَزَرَعْتُهُ حَتَّى اشْتَرَيْتُ مِنْهُ بَقَرًا وَرَاعِيَهَا، ثُمَّ جَاءَ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ أَعْطِنِي حَقِّي‏.‏ فَقُلْتُ انْطَلِقْ إِلَى تِلْكَ الْبَقَرِ وَرَاعِيهَا، فَإِنَّهَا لَكَ‏.‏ فَقَالَ أَتَسْتَهْزِئُ بِي‏.‏ قَالَ فَقُلْتُ مَا أَسْتَهْزِئُ بِكَ وَلَكِنَّهَا لَكَ‏.‏ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا‏.‏ فَكُشِفَ عَنْهُمْ ‏ ‏‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"மூன்று நபர்கள் (வழியில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்கு மழை பிடித்தது. அவர்கள் மலையிலுள்ள ஒரு குகைக்குள் நுழைந்தார்கள். அப்போது மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து, குகையின் வாசலை அடைத்துக் கொண்டது. அவர்கள் (ஒருவருக்கொருவர்), 'நீங்கள் செய்த நற்செயல்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று பேசிக்கொண்டார்கள்.

அவர்களில் ஒருவர் கூறினார்: 'இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் (கால்நடைகளை) மேய்த்துவிட்டு வெளியே செல்வேன். பிறகு (மாலையில்) வந்து பால் கறந்து, அந்தப் பாலைப் பாத்திரத்தில் என் பெற்றோரிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். அதன் பிறகே என் குழந்தைகளுக்கும், என் குடும்பத்தாருக்கும், என் மனைவிக்கும் புகட்டுவேன். ஓர் இரவில் நான் வருவதற்குத் தாமதமாகிவிட்டது. நான் வந்தபோது அவர்கள் இருவரும் உறங்கிவிட்டிருந்தார்கள். அவர்களை எழுப்ப எனக்கு மனமில்லை. குழந்தங்களோ பசியால் என் காலடியில் அழுது கொண்டிருந்தார்கள். விடியும் வரை எனதும் அவர்களது நிலையும் இப்படியே இருந்தது. இறைவா! உனது திருப்பொருத்தத்தை நாடியே நான் இதைச் செய்தேன் என்று நீ அறிந்தால், நாங்கள் வானத்தைப் பார்க்கும் அளவுக்கு (பாறையை விலக்கி) ஒரு இடைவெளியை ஏற்படுத்துவாயாக!' (என்று வேண்டினார்). பாறை (சிறிது) விலகியது.

வேறொருவர் கூறினார்: 'இறைவா! என் தந்தையின் சகோதரர் மகள் (மீது) நான் அன்பு வைத்திருந்தேன். ஒரு ஆண், பெண்களை நேசிப்பதிலேயே மிக அதிகமாக நேசிப்பதைப் போன்று அவள் மீது நான் அன்பு வைத்திருந்தேன். (நான் அவளை அடைய விரும்பினேன்). ஆனால், நூறு தீனார்கள் (தங்கக் காசுகள்) கொடுத்தாலன்றி நீ என்னை அடைய முடியாது என்று அவள் சொல்லிவிட்டாள். அதற்காக நான் உழைத்து அதைச் சேகரித்தேன். (அவளிடம் கொடுத்துவிட்டு) அவளுடைய இரண்டு கால்களுக்கு இடையே நான் அமர்ந்தபோது, 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையில் (திருமணம் செய்து) அன்றி, முத்திரையை உடைக்காதே!' என்று அவள் கூறினாள். உடனே நான் எழுந்து அவளைவிட்டு விலகிவிட்டேன். இறைவா! உனது திருப்பொருத்தத்தை நாடியே நான் இதைச் செய்தேன் என்று நீ அறிந்தால், எங்களுக்கு (வழியைத்) திறப்பாயாக!' (என்று வேண்டினார்). பாறை மூன்றில் இரண்டு பங்கு விலகியது.

வேறொருவர் கூறினார்: 'இறைவா! நான் ஒரு ஃபரக் அளவு சோளத்திற்கு ஒரு கூலியாளை அமர்த்தினேன். (வேலை முடிந்ததும்) அவனுக்குக் கூலி கொடுத்தேன். அவன் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். (அவன் போன பிறகு) அந்தச் சோளத்தை நான் பயிரிட்டேன். (அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு) அதிலிருந்து மாடுகளையும் அவற்றை மேய்ப்பவரையும் வாங்கினேன். பிறகு (சில காலம் கழித்து) அவன் வந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! என் கூலியை எனக்குக் கொடுத்துவிடு' என்று கேட்டான். நான், 'அந்த மாடுகளிடமும் அதை மேய்ப்பவரிடமும் செல்! அவை உனக்குரியவைதாம்' என்று சொன்னேன். அதற்கு அவன், 'என்னை நீ கேலி செய்கிறாயா?' என்று கேட்டான். நான், 'உன்னை நான் கேலி செய்யவில்லை; அவை உனக்குரியவைதாம்' என்று சொன்னேன். (அவன் அதை ஓட்டிச் சென்றான்). இறைவா! உனது திருப்பொருத்தத்தை நாடியே நான் இதைச் செய்தேன் என்று நீ அறிந்தால், (பாறையை முழுவதுமாக) விலக்கிவிடு!' என்று வேண்டினார். பாறை (முழுமையாக) விலகியது."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2272ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ انْطَلَقَ ثَلاَثَةُ رَهْطٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ حَتَّى أَوَوُا الْمَبِيتَ إِلَى غَارٍ فَدَخَلُوهُ، فَانْحَدَرَتْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ فَسَدَّتْ عَلَيْهِمُ الْغَارَ فَقَالُوا إِنَّهُ لاَ يُنْجِيكُمْ مِنْ هَذِهِ الصَّخْرَةِ إِلاَّ أَنْ تَدْعُوا اللَّهَ بِصَالِحِ أَعْمَالِكُمْ‏.‏ فَقَالَ رَجُلٌ مِنْهُمُ اللَّهُمَّ كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ، وَكُنْتُ لاَ أَغْبِقُ قَبْلَهُمَا أَهْلاً وَلاَ مَالاً، فَنَأَى بِي فِي طَلَبِ شَىْءٍ يَوْمًا، فَلَمْ أُرِحْ عَلَيْهِمَا حَتَّى نَامَا، فَحَلَبْتُ لَهُمَا غَبُوقَهُمَا فَوَجَدْتُهُمَا نَائِمَيْنِ وَكَرِهْتُ أَنْ أَغْبِقَ قَبْلَهُمَا أَهْلاً أَوْ مَالاً، فَلَبِثْتُ وَالْقَدَحُ عَلَى يَدَىَّ أَنْتَظِرُ اسْتِيقَاظَهُمَا حَتَّى بَرَقَ الْفَجْرُ، فَاسْتَيْقَظَا فَشَرِبَا غَبُوقَهُمَا، اللَّهُمَّ إِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَفَرِّجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ مِنْ هَذِهِ الصَّخْرَةِ، فَانْفَرَجَتْ شَيْئًا لاَ يَسْتَطِيعُونَ الْخُرُوجَ ‏"‏‏.‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ وَقَالَ الآخَرُ اللَّهُمَّ كَانَتْ لِي بِنْتُ عَمٍّ كَانَتْ أَحَبَّ النَّاسِ إِلَىَّ، فَأَرَدْتُهَا عَنْ نَفْسِهَا، فَامْتَنَعَتْ مِنِّي حَتَّى أَلَمَّتْ بِهَا سَنَةٌ مِنَ السِّنِينَ، فَجَاءَتْنِي فَأَعْطَيْتُهَا عِشْرِينَ وَمِائَةَ دِينَارٍ عَلَى أَنْ تُخَلِّيَ بَيْنِي وَبَيْنَ نَفْسِهَا، فَفَعَلَتْ حَتَّى إِذَا قَدَرْتُ عَلَيْهَا قَالَتْ لاَ أُحِلُّ لَكَ أَنْ تَفُضَّ الْخَاتَمَ إِلاَّ بِحَقِّهِ‏.‏ فَتَحَرَّجْتُ مِنَ الْوُقُوعِ عَلَيْهَا، فَانْصَرَفْتُ عَنْهَا وَهْىَ أَحَبُّ النَّاسِ إِلَىَّ وَتَرَكْتُ الذَّهَبَ الَّذِي أَعْطَيْتُهَا، اللَّهُمَّ إِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ‏.‏ فَانْفَرَجَتِ الصَّخْرَةُ، غَيْرَ أَنَّهُمْ لاَ يَسْتَطِيعُونَ الْخُرُوجَ مِنْهَا‏.‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَالَ الثَّالِثُ اللَّهُمَّ إِنِّي اسْتَأْجَرْتُ أُجَرَاءَ فَأَعْطَيْتُهُمْ أَجْرَهُمْ، غَيْرَ رَجُلٍ وَاحِدٍ تَرَكَ الَّذِي لَهُ وَذَهَبَ فَثَمَّرْتُ أَجْرَهُ حَتَّى كَثُرَتْ مِنْهُ الأَمْوَالُ، فَجَاءَنِي بَعْدَ حِينٍ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ أَدِّ إِلَىَّ أَجْرِي‏.‏ فَقُلْتُ لَهُ كُلُّ مَا تَرَى مِنْ أَجْرِكَ مِنَ الإِبِلِ وَالْبَقَرِ وَالْغَنَمِ وَالرَّقِيقِ‏.‏ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ لاَ تَسْتَهْزِئْ بِي‏.‏ فَقُلْتُ إِنِّي لاَ أَسْتَهْزِئُ بِكَ‏.‏ فَأَخَذَهُ كُلَّهُ فَاسْتَاقَهُ فَلَمْ يَتْرُكْ مِنْهُ شَيْئًا، اللَّهُمَّ فَإِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ‏.‏ فَانْفَرَجَتِ الصَّخْرَةُ فَخَرَجُوا يَمْشُونَ ‏"‏‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்:

"உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒரு பயணமாகப்) புறப்பட்டுச் சென்றார்கள். (வழியில்) இரவைக் கழிப்பதற்காக ஒரு குகையை அடைந்து அதற்குள் நுழைந்தார்கள். அப்போது மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்துக் கொண்டது. அவர்கள், 'நீங்கள் (அல்லாஹ்வுக்காக) செய்த நற்செயல்களைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர, இந்தப் பாறையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது' என்று (தங்களுக்குள்) பேசிக்கொண்டனர்.

அவர்களில் ஒருவர் கூறினார்: 'இறைவா! எனக்கு மிகவும் வயதான பெற்றோர் இருந்தனர். அவர்களுக்கு முன் என் குடும்பத்தாருக்கோ அல்லது என் ஆடுமாடுகளுக்கோ (மாலை நேரப்) பால் புகட்ட மாட்டேன். ஒரு நாள் ஏதோ ஒரு தேவைக்காக (வெளியே சென்று) வெகுதூரம் சென்றுவிட்டேன். அவர்கள் உறங்கிய பின்னரே நான் (திரும்பி) வந்தேன். அவர்களுக்கான பாலைக் கறந்து அவர்களிடம் சென்றேன். அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்பவோ, அவர்களுக்கு முன் என் குடும்பத்தாருக்கோ அல்லது ஆடுமாடுகளுக்கோ பால் கொடுப்பதையோ நான் விரும்பவில்லை. (பால்) கிண்ணத்தைக் கையில் ஏந்தியவாறு அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இப்படியே ஃபஜ்ர் (அதிகாலை) நேரம் வந்துவிட்டது. அவர்கள் விழித்துத் தங்களுக்குரிய பாலைக் குடித்தார்கள். இறைவா! உன்னுடைய முகத்தை (திருப்தியை) நாடி நான் இதைச் செய்திருந்தால், இந்தப் பாறையினால் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தத் துன்பத்தை எங்களை விட்டு நீக்குவாயாக!' (என்று பிரார்த்தித்தார்). பாறை சிறிது விலகியது. ஆனால், அவர்களால் வெளியேற முடியவில்லை."

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மற்றொருவர் கூறினார்: 'இறைவா! என் தந்தையின் சகோதரர் மகள் (என் மாமன் மகள்) ஒருத்தி இருந்தாள். மக்கலிலேயே அவள் மீதுதான் எனக்கு அதிக நேசம் இருந்தது. அவளை அடைய நான் விரும்பினேன். அவள் என்னிடமிருந்து விலகி நின்றாள். பஞ்ச காலத்தில் ஒரு வருடம் அவள் (வறுமையின் காரணமாக) என்னிடம் வந்தாள். அவளை நான் அடைவதற்குச் சம்மதித்தால் நூற்றியிருபது தினார் (தங்கக் காசுகள்) தருவதாகக் கூறினேன். அவளும் சம்மதித்தாள். அவளை நான் என் வசப்படுத்தியபோது, 'உரிமையின்றி (திருமணம் முடிக்காமல்) முத்திரையை உடைப்பதை உனக்கு நான் ஆகுமாக்கமாட்டேன்' என்று கூறினாள். உடனே (பாவத்திற்கு அஞ்சி) அவளை விட்டு விலகிவிட்டேன். மக்கலிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவளாக அவள் இருந்தும் அவளை விட்டு விலகினேன். அவளுக்கு நான் கொடுத்த தங்கத்தையும் விட்டுவிட்டேன். இறைவா! உன்னுடைய முகத்தை (திருப்தியை) நாடி நான் இதைச் செய்திருந்தால், நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தத் துன்பத்தை எங்களை விட்டு நீக்குவாயாக!' (என்று வேண்டினார்). பாறை (மேலும்) விலகியது. ஆனால், அவர்களால் வெளியேற முடியவில்லை."

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மூன்றாமவர் கூறினார்: 'இறைவா! நான் கூலிக்கு ஆட்களை அமர்த்தியிருந்தேன். அவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் கூலியைக் கொடுத்துவிட்டேன். அந்த ஒருவர் மட்டும் (தன் கூலியைப் பெறாமல்) சென்றுவிட்டார். அவருக்குச் சேரவேண்டிய கூலியை நான் முதலீடு செய்து பெருக்கினேன். அது பெருகிப் பெரும் செல்வமானது. ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு அவர் என்னிடம் வந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடுங்கள்' என்று கேட்டார். நான், 'நீர் பார்க்கின்ற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் யாவும் உம் கூலியிலிருந்து உருவானவைதான்' என்றேன். அதற்கு அவர், 'அல்லாஹ்வின் அடியாரே! என்னைக் கேலி செய்யாதீர்கள்' என்றார். 'நான் உம்மைக் கேலி செய்யவில்லை' என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஓட்டிச் சென்றார்; எதையும் மிச்சம் வைக்கவில்லை. இறைவா! உன்னுடைய முகத்தை (திருப்தியை) நாடி நான் இதைச் செய்திருந்தால், நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தத் துன்பத்தை எங்களை விட்டு நீக்குவாயாக!' (என்று வேண்டினார்). உடனே பாறை (முழுமையாக) விலகியது. அவர்கள் (வெளியேறி) நடந்து சென்றார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح