அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் (கண்ணியமும் மகத்துவமும் மிக்கவன்), பகலில் தவறு செய்தவர் தவ்பா செய்வதற்காக இரவில் தனது கரத்தை நீட்டுகிறான்; இரவில் தவறு செய்தவர் தவ்பா செய்வதற்காகப் பகலில் தனது கரத்தை நீட்டுகிறான். சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் வரை (இது தொடரும்).”
இதே அறிவிப்பாளர் தொடர் வழியாக ஷுஅபா அவர்களிடமிருந்து இது போன்றே மற்றோர் அறிவிப்பும் வந்துள்ளது.