حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ ـ رضى الله عنه جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَقُولُ فِي رَجُلٍ أَحَبَّ قَوْمًا وَلَمْ يَلْحَقْ بِهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ . تَابَعَهُ جَرِيرُ بْنُ حَازِمٍ وَسُلَيْمَانُ بْنُ قَرْمٍ وَأَبُو عَوَانَةَ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! சிலரை நேசிக்கிற, ஆனால் அவர்களின் நற்செயல்களில் அவர்களை எட்ட முடியாத ஒரு மனிதரைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒவ்வொருவரும் தாம் நேசிப்பவர்களுடன் இருப்பார்கள்" என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது; , "ஒருவர் சிலரை நேசிக்கலாம், ஆனால் அவர்கள் அளவுக்கு இவரால் நற்செயல் செய்ய முடியவில்லையே?" நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒவ்வொருவரும் தாம் நேசிப்பவர்களுடனேயே இருப்பார்."
حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ رَأَيْتُ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرِحُوا بِشَىْءٍ لَمْ أَرَهُمْ فَرِحُوا بِشَىْءٍ أَشَدَّ مِنْهُ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ يُحِبُّ الرَّجُلَ عَلَى الْعَمَلِ مِنَ الْخَيْرِ يَعْمَلُ بِهِ وَلاَ يَعْمَلُ بِمِثْلِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ .
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் (ரழி) மகிழ்ச்சியடைந்ததைப் போல வேறு எந்த விஷயத்திலும் அவர்கள் மகிழ்ச்சியடைந்து நான் கண்டதில்லை. ஒரு மனிதர் கூறினார்: அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் மற்றொருவரை அவர் செய்யும் நற்செயலுக்காக நேசிக்கிறார், ஆனால் அவரால் அவரைப் போல செய்ய முடியவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தாம் நேசிப்பவர்களுடனேயே இருப்பார்.
சஃப்வான் பின் அஸ்ஸால் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒரு கிராமவாசி உரத்த குரலில் கூறினார்:
"யா முஹம்மது (ஸல்)! ஒரு மனிதர் ஒரு கூட்டத்தினரை நேசிக்கிறார், ஆனால் (அவர்களின் நற்செயல்களைப்) போன்ற நிலையை அவர் அடையவில்லை." அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு மனிதர், அவர் யாரை நேசிக்கிறாரோ அவருடனே இருப்பார்."