சுஹைப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு முஃமினுடைய காரியம் ஆச்சரியமானது! நிச்சயமாக, அவருடைய காரியங்கள் அனைத்தும் நன்மையே. இது ஒரு முஃமினைத் தவிர வேறு எவருக்கும் இல்லை. அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் அவர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துகிறார்; அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்குத் துன்பம் ஏற்பட்டால் அவர் பொறுமை காக்கிறார்; அதுவும் அவருக்கு நன்மையாக அமைகிறது.”