இப்னு அப்பாஸ் (ரழி) என்னிடம் கூறினார்கள்: சுவனத்துப் பெண் ஒருவரை உங்களுக்கு நான் காட்டட்டுமா? நான் கூறினேன்: ஆம். அவர்கள் கூறினார்கள்: இதோ இந்த கறுப்பு நிற பெண்மணி. அப்பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார்கள்: எனக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது, (அதனால்) என் ஆடை விலகிவிடுகிறது; எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீ உன்னால் இயன்றளவு பொறுமையைக் கடைப்பிடி, உனக்கு சுவனம் கிடைக்கும். நீ விரும்பினால், உன்னை அல்லாஹ் குணப்படுத்த நான் அவனிடம் பிரார்த்திக்கிறேன்." அப்பெண்மணி கூறினார்கள்: "நான் பொறுமையை மேற்கொள்ளத் தயாராக இருக்கிறேன். (ஆனால்) என் ஆடை விலகிவிடுவதுதான் (தாங்க முடியாத சங்கடம்). ஆகவே, என் ஆடை விலகாமல் இருக்க அல்லாஹ்விடம் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்." ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காக பிரார்த்தனை செய்தார்கள்.