அப்துல்லாஹ் (ரழி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், இறைத்தூதர்களில் ஒருவரைப் பற்றி (அவர் பட்ட துன்பங்களை) விவரித்துக் கொண்டிருந்ததை நான் (இப்போதும்) பார்ப்பதைப் போன்றுள்ளது. அந்த இறைத்தூதரை அவருடைய சமூகத்தார் அடித்து, இரத்தம் சொட்டச் செய்திருந்தனர். அப்போது அவர் தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்துக்கொண்டே, “அல்லாஹும்மஃக்ஃபிர் லிகவ்மீ ஃபஇன்னஹும் லா யஃலமூன்” (அல்லாஹ்வே! என் சமூகத்தாரை மன்னிப்பாயாக! நிச்சயமாக அவர்கள் அறியாதவர்கள்) என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நபிமார்களில் ஒரு நபி பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விவரித்துக் காட்டியதை நான் (இப்போதும்) பார்ப்பது போன்றுள்ளது. (அந்த நபி) தம் சமூகத்தாரால் அடிக்கப்பட்டு, தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்துக்கொண்டு, ‘ரப்பிக்ஃபிர் லிகவ்மீ ஃபஇன்னஹும் லா யஃலமூன்’ (என் இறைவா! என் சமூகத்தாரை மன்னிப்பாயாக! ஏனெனில் அவர்கள் அறியாதவர்கள்) என்று கூறிய (அந்த நிகழ்வை)."