'அதீ இப்னு ஹாத்திம் (ரழி) அவர்களிடம் ஓர் யாசகர் வந்து, ஓர் அடிமையின் விலையையோ அல்லது அடிமையின் விலையில் ஒரு பகுதியையோ (தர்மமாகத்) தருமாறு கேட்டார். அதற்கு 'அதீ (ரழி), "எனது கவச உடையையும் தலைக்கவசத்தையும் தவிர உமக்குக் கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை. ஆயினும், அவற்றை உமக்குக் கொடுக்குமாறு என் குடும்பத்தாருக்கு நான் கடிதம் எழுதுகிறேன்" என்று கூறினார்கள். ஆனால் அவர் (அந்த யாசகர்) அதற்கு உடன்படவில்லை. ஆகவே 'அதீ (ரழி) கோபமடைந்து, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உமக்கு எதையும் கொடுக்க மாட்டேன்" என்று கூறினார்கள். பின்னர் அந்த மனிதர் அதை ஏற்றுக்கொள்வதற்குச் சம்மதித்தார். அப்போது 'அதீ (ரழி) கூறினார்கள்: "அல்லாஹ்வின் மீது ஆணையாக! 'யார் ஒரு சத்தியம் செய்துவிட்டு, பின்னர் அல்லாஹ்விடம் அதைவிட இறையச்சமுள்ள ஒன்றைக் கண்டால், அவர் அந்த இறையச்சமுள்ள செயலையே செய்யட்டும்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்காவிட்டால், நான் (எனது) சத்தியத்தை முறித்திருக்க மாட்டேன்."