"அல்லாஹ்வே! நான் உனக்கே சரணடைந்தேன்; நான் உன் மீது நம்பிக்கை கொண்டேன்; உன் மீதே முழு நம்பிக்கை வைத்தேன்; உன்னிடமே (பாவமன்னிப்புக் கோரி) திரும்பினேன்; மேலும் உனது உதவியைக் கொண்டே (எதிரிகளுடன்) வழக்காடினேன். அல்லாஹ்வே! உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீ என்னை வழிதவறச் செய்வதிலிருந்து உனது கண்ணியத்தைக் கொண்டு உன்னிடமே நான் பாதுகாவல் தேடுகிறேன். நீ மரணிக்காத உயிருள்ளவன்; (ஆனால்) ஜின்களும் மனிதர்களும் மரணித்துவிடுவார்கள்."