நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களிடம் சென்று, அல்-ஹஜ்ஜாஜிடமிருந்து நாங்கள் சந்திக்கும் (இன்னல்கள்) பற்றி முறையிட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: "பொறுமையாக இருங்கள்! ஏனெனில், நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திக்கும் வரை, உங்களுக்கு எந்தக் காலம் வந்தாலும், அதற்கடுத்து வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும். இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்."